உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 01

بسم الله الرحمن الرحيم

நாம் அனைவரும் அல்லாஹுத்தஆலாவினால் கண்ணியப்படுத்தப்பட்ட துல்ஹஜ் மாதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களைப் பொறுத்தமட்டில் சிறப்பிக்கப்பட்ட நாட்களாகும். இதன் ஒன்பதாவது நாள் அரபா நாளாகவும் பத்தாவது நாள் ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் கணிக்கப்படுகின்றன.

அரபா நாளின் சிறப்புகள்

இரவுகளும் பகல்களும் மாதங்களும் வருடங்களும் விரைவாகச் செல்கின்றன. விரைவாக மறைகின்றன. இப்படிப்பட்ட காலங்களில் அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு நன்மையைத்தேடித் தரக்கூடிய பல காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவைகளில் சில காலங்கள் நன்மைகளை அதிகரிக்கின்றன. இன்னும், சில காலங்கள் பாவங்களை அழித்துவிடுகின்றன.

உழ்ஹிய்யா மாமிசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விநியோகிப்பதற்கு சுன்னாவில் இடமுள்ளதா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: “உழ்ஹிய்யாவைப் பொருத்தளவில் அவசியம் அதிலிருந்து வரையறுக்கப்படாத ஓர் அளவு ஸதகாச் செய்யப்பட வேண்டும்.

உம்ரா செய்வது எப்படி?

  • மீக்காத்தை அடைதல்.
  • அங்கு குளித்தல். (ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானது)
  • மணம் பூசுதல்.
  • ஆண்கள் மாத்திரம் இஹ்ராம் ஆடை அணிதல்.

கடனுக்குப் பணம் வாங்கி ஹஜ் கடைமை நிறைவேற்ற முடியுமா?

بسم الله الرحمن الرحيم

எவருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றியதன் பின் நாடு திரும்பியவுடன் தனது கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணவசதியுள்ளதோ அவருக்கு வினவப்பட்ட முறையில் கடனுக்குப் பணம் பெற்று ஹஜ் செய்ய முடியும். மேலும் அவர் அதனையிட்டு வஸிய்யத் செய்து கொள்வார்.

கடனாளிக்கு ஹஜ் செய்ய முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடுகிறார். அவர் மீது செலுத்த வேண்டிய ஒரு கடன் தொகை உள்ளது. இந்நிலையில் அவருக்கு ஹஜ் செய்ய முடியுமா?

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்.

بسم الله الرحمن الرحيم

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைச் சிறப்பித்துப் பல செய்திகள் குர்ஆன், ஹதீஸ் நெடுகிலும் பதிவாகியுள்ளன. அந்த விதத்தில் அல்பஜ்ர் அத்தியாயத்தின் துவக்கத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم

1. “அல்லாஹ் ரு ஹஜ்ஜின் மூலம் மூன்று நபர்களை சுவனத்தில் நுழைவிக்கிறான். அவர்கள்: மரணித்தவரும் தனக்காக ஹஜ் செய்தவரும் அதனைக் கொண்டு வஸிய்யத் செய்தவருமாவார்கள்.

இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அபூமஃஷர் என்பவர் பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்ஹாபிழ் அல்இராகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்ரீஜு அஹாதீஸில் இஹ்யாஃ என்ற நூலில் இந்த ஹதீஸை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சொத்தை விற்று ஹஜ் செய்யலாமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: வீடு, பூமி போன்ற அசையாச் சொத்துக்களைத் தன்வசம் வைத்திருப்பவர் அவற்றை விற்று ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியுமா?

பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மஹ்ரமான ஆண் துணை அவசியமா?

بسم الله الرحمن الرحيم

ஒரு பெண் மீது ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகளில் ஒன்று அவளுக்குரிய மஹ்ரமைப் பெற்றிருத்தலாகும். இவ்விடயம் ஆல இம்றான் அத்தியாயத்தின் 97ஆம் வசனத்தில் ஹஜ் தொடர்பாகக் கூறப்பட்ட ‘அதற்குச் சென்றுவர யாருக்குச் சக்தி உள்ளதோ” என்ற வாசகத்தில் உள்ளடங்கியிருக்கின்றது. இக்கருத்தை இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக், அஸ்ஸவ்ரி, ஷாபி, இப்னுல் முன்திர், ஹஸனுல் பஸரி, அந்நஹஇ ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் கூறியுள்ளனர்.