ஸலப் இணையம் பற்றி

بسم الله الرحمن الرحيم

إن الحمد لله نحمده و نستعينه و نستغفره و نعود بالله من شرور أنفسنا و من سيئات أعمالنا، من يهديه الله فلا مضل له و من يضلل فلا هادي له و أشهد ان لا إله إلا الله وحده لا شريك له و أشهد أن محمدا عبده ورسوله۔

يَا أيّها الّذِينَ ٱمَنُوا اتّقوا اللّهَ حَقّ تُقَاتِهِ وَ لَا تَمُوتُنّ إِلّا و أنتُم مّسلِمُون

آل عمران : ١٠٢

يَا أَيّهَا النّاسُ اتّقُوا رَبّكُمُ الّذِي خَلَقَكُم مّن نّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتّقُوا اللّهَ الّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأرْحَامَ إِنّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

النساء: ١

يَا أَيّهَا الّذِينَ آمَنُوا اتّقُوا اللّهَ وَقُولُوا قَوْلًا سَدِيد اً يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًاعَظِيمًا

الأحزاب: ٧١

أما بعد، فإن خير الحديث كتاب الله و خير الهدي هدي محمد صلى الله عليه و سلم، و شرالأمور محدثاتها، وكل محدثة بدعة، و كل بدعة ضلالة، وكل ضلالة في النار

இதுவே எங்கள் கொள்கையும் பணியும்

  • முழு மனித இனத்தினதும் ஈருலக வெற்றியும் சந்தோஷமும் தூய்மையான இஸ்லாத்தின் வழிகாட்டல்களின் மூலமே அடைய முடியும் என்பதை ஆழமாக நம்புகிறோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘இன்னும், இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது; மேலும், அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.’ (ஆல இம்ரான்: 85)

  • கொள்கை – அகீதாச் – சீர்திருத்தத்தினூடாகவே இஸ்லாமிய உம்மத் பறிகொடுத்துள்ள தலைமைத்துவம், ஒற்றுமை, பலம் என்பவற்றை மீட்டெடுக்க முடியும் என உரத்துச் சொல்கிறோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தோருக்கு இவர்களுக்கு முன்னுள்ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை இவர்களது அச்சத்திற்குப் பின்னர் பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாம் பாவிகள்’ (அந்நூர்: 55)

  • மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டல்களை இஸ்லாத்தின் இரு பெரும் மூலாதாரங்களான சங்கைமிகு அல்குர்ஆனிலும், நபிகளாரின் புனித சுன்னாவிலும் மாத்திரமே பெறமுடியும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.’ (அஹ்ஸாப்: 70, 71)
  • அல்குர்ஆன் அல்லது ஆதரபூர்வமான ஹதீஸ்களின் வழிகாட்டல்களுக்கு முற்றாக அடிபணிய வேண்டும், அவற்றை வேறு எந்த அளவு கோல் கொண்டும் அளக்க முற்படுவது வழிகேட்டிற்கான முதல் வாசலாகும் என்பதை உளப்பூர்வமாக ஏற்றிருக்கின்றோம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.’ (அந்நிஸா: 65)
  • அவ்விரு மூலாதாரங்களையும் “சிறந்தத நூற்றாண்டைச் சார்ந்தோர்” என்ற பாராட்டைப் பெற்ற ஸஹாபாக்கள், தபிஈன்கள், தபஉத்தாபிஈன்கள் ஆகியோரின் வழிகாட்டலில் பின்பற்றுவதே சுவனத்திற்கான உத்தரவாதத்தைப் பெற்றுத்தரும் என்பதில் கடுகளவும் சந்தேகமற்றிருக்கின்றோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமீன்களின் வழி அல்லாததைப் பின்பற்றுகின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.’ (அந்நிஸா: 115)

  • ஸஹாபாக்கள் மற்றும் ஏனைய முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களது வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது அல்குர்ஆனுக்கோ அல்லது அஸ்ஸுன்னாவுக்கோ அவை முரண்பட்டாலும் சரியே என்பதல்ல. ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் தவறு, பிழை போன்ற வற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் அல்லர் என்பது எமது நிலைப்பாடாகும்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் நீங்கள் முந்தாதீர்கள்.’ (அல்ஹுஜுராத்: 1)

  • அமைப்புக்களாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து இஸ்லாமியப் பணி செய்வது நபிகளாரின் வழிகாட்டல்களுக்கு நேர்முரணான போக்காகும், அவ்வமைப்புக்களும் இயக்கங்களும் பிரிவுண்ட எமது சமூகத்தை மேலும் பிரிவினையின் பாலே இட்டுச் செல்லும். இத்தகைய அமைப்புக்களோடு இணைந்து செயற்படுவதோ அல்லது எமது பணியில் அவர்களை இணைத்துக்கொள்வதோ எமது பணியை கலங்கப்படுத்தும் என்பதில் எச்சரிக்கையாகவே உள்ளோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’ (அல்அன்ஆம்: 159)

  • இஸ்லாமிய அழைப்புப் பணியானது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் காட்டித்தந்த வழிகாட்டல் – மன்ஹஜ் – இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எப்போதும் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றோம். அவ்வழிகாட்டலுக்கு மாற்றமான முறைமைகள் எமது அழைப்புப் பணியில் கலந்துவிடாமலும் எச்சரிக்கையாக இருக்கின்றோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும் வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.’ (அல்மாயிதா: 48 )

  • ஸஹாபாக்கள் மற்றும் ஏனைய முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களது வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது அல்குர்ஆனுக்கோ அல்லது அஸ்ஸுன்னாவுக்கோ அவை முரண்பட்டாலும் சரியே என்பதல்ல. ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் தவறு, பிழை போன்ற வற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் அல்லர் என்பது எமது நிலைப்பாடாகும்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் நீங்கள் முந்தாதீர்கள்.’ (அல்ஹுஜுராத்: 1)

  • அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரண்படாது வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற, வாழப்போகின்ற இஸ்லாமிய அறிஞர்களின் சீரிய வழிகாட்டல்களைக் கொண்டு எம்மைச் சீர்திருத்திக்கொள்ள முயற்சிக்கிறோம்; அவர்களில் எவருக்காகவும் பிடிவாதம் கொள்ளமாட்டோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.’ (அந்நஹ்ல்: 43)

  • இஸ்லாத்திற்கு மாறுபட்ட கருத்துக்களையோ, செயற்பாடுகளையோ சமூகத்தில் காணும் போது அவற்றை இஸ்லாமிய வரையறைகளைப் பேணி விமர்சிப்பது மார்க்கத்தின் அடிப்படையான ஓர் அம்சம் என்பதில் ஐயமற்றிருக்கின்றோம்.

    அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘குற்றவாளிகளின் வழி தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.’ (அல்அன்ஆம்: 55)

  • அவ்வாறே, எம்மிடையே காணப்படும் தவறுகள் ஆதரபூர்வமாக சுட்டிக்காட்டப்படுமிடத்து அவற்றைப் பெருமனதோடு ஏற்றுக்கொள்ள ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

    உமர் ரலி அவர்கள் கூறுகின்றார்கள்: ‘எவர் எனக்கு எனது குறைகளை அன்பளிப்புச் செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.’ (இர்ஷாதுல் இபாத் லில் இஸ்திஃதாதி லியவ்மில் மஆத்)

  • மேற்சொல்லப்பட்ட கொள்கை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த அல்லாஹுத்தஆலா எமக்களித்த பாக்கியமாகவே 1999ம் ஆண்டு ‘அத்தார் அஸ்ஸலபிய்யா’ என்ற நாமத்தோடு பலகத்துறை என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசலை நாம் எண்ணுகிறோம். மேலும், நாம் ஏலவே குறிப்பிடப்பட்ட அம்சங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமல் பல இஸ்லாமியப் பேர்தாங்கிகளுக்கு மத்தியில் அநாதைகளாகத் தத்தளித்த காலப்பகுதியில் அவற்றைச் சரிவர எமக்கு விளக்கமளித்து, எப்படியான சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்பட்டு எம் சமுகம் நிலைகுழைந்து போனாலும் எமக்கு அவற்றின் போது பொருத்தமான வாழ்க்கை நெறியைக் காட்டித்தந்த மறைந்த அறிஞர் நுபார் பாரூக் ரஹிமஹுல்லாஹ் அவர்களையும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்துகின்றோம். அல்லாஹ் அவர்களின் கப்றறையை ஒளிமயமாக்குவானாக!
  • அல்லாஹ்வின் துணைகொண்டு பின்னர் இப்பணிக்காக உழைத்த தூய்மையுள்ள சகோதரர்களின் பங்களிப்பைக் கொண்டும் தாழ்மையான இப்பள்ளிவாசலினூடாக தூய்மையான இஸ்லாத்தின் தூதை பல்துறை ஊடகங்களினூடகவும் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக எடுத்துறைத்துக் கொண்டிருக்கின்றோம்.
  • இஸ்லாத்தின் இத்தூது எமது நாட்டின் நாளாப் பக்கங்களிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற அவாவில் 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு ஏழாவது ஆண்டையும் கடந்து நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 50 இற்கும் அதிகமான மாணவர்களோடு தடம் பதித்துக் கொண்டிருக்கும் ‘மத்ரஸது அல்கமா’ என்ற கலாசாலை எமது இலட்சியப் பயணத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகும். அல்ஹம்துலில்லாஹ்.
  • அவ்வாறே, எமது அழைப்பின் ஓசை கடல் கடந்து உலகின் நாலா பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் செவிகளையும் சென்றடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிற்குக் கிடைத்த மகத்தான அல்லாஹ்வுத்தஆலாவின் உதவியே salaf.co என்ற நாமத்தோடு நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் இந்த இணையதளமாகும்.
  • இப்பணியை இதுவரைகாலமும் சுமந்து செல்ல துணைபுரிந்த அல்லாஹ்வை என்றென்றும் புகழ்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ். தொடர்ந்தும் சீராகப்பயணிக்க துணைபுரிய அவனிடமே கையேந்துகின்றோம்.
  • அவ்வாறே, இன்றுவரை எம்மோடு தோல்கொடுத்து தமது கருத்துக்களாலும், உடலாலும், பொருளாலும் துணை நின்ற நல்லுள்ளங்களை நன்றியோடு நினைவு கூறுகின்றோம். தொடர்ந்தும் இவ்வமானிதத்தை சுமந்து செல்ல எம்மோடு கைகோர்த்து நிற்குமாறு இப்பணியை நேசிக்கின்ற எல்லா உள்ளங்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.

    அல்லாஹ் யாவற்றையும் மிகவும் அறிந்தவன்

2 Responses to ஸலப் இணையம் பற்றி

  1. abdullah says:

    assalamualaikkum wa rahmathullahi wa barakkathuhu neengal ungalai salaf manhaj il ullawargal yengireergal aanal usman raliyallahu anhu awargal erandawadu adaanai yerpaduthiyadu bid aa yengireeegal dammajai thakleed seithu kondu salaf yendru solladeergal

  2. Yusuf says:

    Assalam alaikum…
    Dear Brothers,
    May Allah subahathala reward you jannah…..
    Kindly post the correct view for fasting Saturday. Now a days most of people’s confuse this issue….Definitly it will most useful for us…

    Barakallahfeekum
    Abu Amrah Yusuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *