அழைப்புப் பணி நோக்கில் பித்அத் வாதிகளின் இஸ்தலங்களை நாடிச் செல்லல்.

بسم الله الرحمن الرحيم

கேள்வி: பித்அத் வாதிகளின் பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்கள் பேன்றவற்றை நாடிச் சென்று உரை நிகழ்த்தல் மேலும், பாடங்கள் நடாத்தல் போன்ற நோக்கிற்காக (அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்) செல்லக்கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ், இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் போன்ற அறிஞர்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட நஜ்ரான் நாட்டு கிரிஸ்தவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள் அல்லவா?!

பதில்: அத்தகைய இடங்களுக்குச் செல்லக் கூடாது என்பதற்கு ஆதாரம், குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்றுள்ள எச்சரிக்கைகளேயாகும். அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் மனோ இச்சையைப் பின்பற்றுவோருடன் உட்காருவதை விட்டும் எச்சரித்துப் பொதுப்படையான பல ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற : ‘நல்ல நண்பனுக்கும் கொட்ட நண்பனுக்கும் உதாரணம் வாசனை வியாபாரியும் கொல்லனுமாவான்” என்ற ஹதீஸை சற்று சிந்தித்துப் பாருங்கள். இதுபோன்ற பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவைபற்றி விரிவாகப் பேசும் இடம் இதுவன்று.

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறும் போது: “மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களிடத்தில் உட்காராதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக அவர்களுடன் உட்காருவது (உள்ளத்தை) நோயுறச் செய்யக்கூடியதாக இருக்கும்” என்றார்கள்.

அதேபோன்று, அபூ கிலாபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: “நீங்கள் மனோ இச்சையைப் பின்பற்றுவோருடன் உட்காராதீர்கள்! அவர்கள் உங்களை பித்அத்தில் ஆழ்த்திவிடுவார்கள் என்பதைப் பயப்படுகின்றேன். அல்லது, உங்களது மார்க்கத்தில் உங்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி விடுவார்கள் என்பதைப் பயப்படுகின்றேன்” என்றார்கள்.

இதனையே உலமாக்கள் கூறியுள்ளார்கள். இதற்கே ஆதாரங்களும் உள்ளன.

வழங்கியவர்: அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்

தமிழில்: அபூஹுனைப்

குறிப்பு: ஷெய்க் அவர்கள் உண்மையே மொழிந்துவிட்டார்கள். பித்அத்வாதிகளுடன் இணைந்து அழைப்புப் பணியில் ஈடுபடுவது எம்மை அவர்கள் தமது பித்அத்துக்களுக்கு ஆதாரம் பிடிப்பதற்கும் எமது தனித்தன்மை இல்லாமல் போவதற்கும் உபதேசம் செய்யும் பண்பு அற்றுப் போவதற்கும் வலா பரா பேணும் தன்மை இல்லாமல் போவதற்கும் வழிவகுக்கின்றது.