பருவமடையாத சிறுவன் நோன்பு நோற்பதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

சிறுவனாக உள்ளவன் நோன்பு நோற்பது நாம் முன்பு குறிப்பிட்டது போன்று அவனுக்கு கட்டாயமானதல்ல. ஆனாலும், பயிற்சி பெற்றுக்கொள்வதற்காக நோன்பு நோற்குமாறு ஏவுவது அவனுடைய பொறுப்புதாரிக்குக் கடமையாகும். பருவமடையாத சிறுவர் விடயத்தில் நோன்பு நோற்பது என்பது சுன்னாவான விடயமாகும். அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கும். அவன் அதை விட்டால் அதற்கு அவனுக்குப் பாவமில்லை.

–    நூல்: பிக்ஹுல் இபாதாத், அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

–    தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்