கடனுக்குப் பணம் வாங்கி ஹஜ் கடைமை நிறைவேற்ற முடியுமா?

بسم الله الرحمن الرحيم

எவருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றியதன் பின் நாடு திரும்பியவுடன் தனது கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணவசதியுள்ளதோ அவருக்கு வினவப்பட்ட முறையில் கடனுக்குப் பணம் பெற்று ஹஜ் செய்ய முடியும். மேலும் அவர் அதனையிட்டு வஸிய்யத் செய்து கொள்வார்.

மாற்றமாக, எவரிடத்தில் ஹஜ் செய்வதற்கான வசதி இல்லையோ மேலும், அவ்வாறு கடன் எடுத்துச் சென்றால் உரியதினத்தில் அதனைக் கையளிக்க முடியாத நிலை உள்ளதோ அவருக்கு இவ்வாறான முறையில் ஹஜ் செய்வது அவசியமன்று. இத்தகைய நிலையில் அவர் ஹஜ் செய்யாமல் மரணித்தாலும் அல்லாஹ்விடத்தில் தங்கடத்திற்குரியவராகவே கருதப்படுவார்.

பகரமாக, கடன் பெற்று ஹஜ் செய்து குறித்த கடனை நிறைவேற்ற முடியாத நிலையில் மரணத்தைத் தழுவினால் அவர் தன்னைத் தானே மறுமையில் தீங்கிற்குள்ளாக்கியவராகக் கருதப்படுவார்.

எனவே, ஹஜ்ஜதுல் இஸ்லாம் எனப்படும் முதல் ஹஜ்ஜானது சக்தியுடையவர்கள் மீதே கடமையாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘மனிதர்களில் அதற்குச் சென்றுவர சத்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.’ (ஆலஇம்றான்: 97)

– பார்க்க: ‘அல்கன்ஸுஸ் ஸமீன் பில் இஜாபதி அலா அஸ்இலதி தலபதில் இல்ம் வஸ்ஸாஇரீன்’ (3/347)

– தமிழில்: அபூ ஹுனைப்