காதலர் தினம் கொண்டாடலாமா?

بسم الله الرحمن الرحيم

காதலர் தினம் சம்பந்தமாக அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது இவ்வாறு பதிலளித்தார்கள்.

“காதலர் தினம் எனும் பெயரில் கொண்டாடப்படும் கொண்டாட்டம் சில காரணங்களுக்காக வேண்டித் தடை செய்யப்பட்டுள்ளது. அக்காரணங்களாவன:

1. இது ஒரு பித்அத்தான தினமாகும். இதற்கு மார்க்கத்தில் எந்தவித அடிப்படையும் கிடையாது.

2. இது மார்க்கம் தடை செய்த காதலின் பால் அழைப்பு விடுக்கின்றது.

3. அத்தோடு, நம் முன்னோர்களான ( ஸஹாபாக்கள் ) காட்டித்தராத, மார்க்கத்திற்கு முரணான காரியங்களின் பால் நம்மை ஈடுபடுத்துகின்றது.

எனவே, இத்தினத்தை முன்னிட்டு உணவு வகைகளைக்கொண்டு அன்பைப் பரிமாறிக் கொள்வதோ, வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோ தடுக்கப்பட்ட காரியங்களாகும்.

ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைக் கொண்டு கண்ணியவானாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மாற்றமாகத் தனது உறுதியை இழந்து நிலையற்றவனாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்களையெல்லாம் கேட்டுப் பின்பற்றக்கூடியவனாக ஒருபோதும் இருக்கக்கூடாது”.

பார்க்க: அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பத்வா தொகுப்பு : 16/199

தமிழில்: அஸ்ஹர் இப்னு அபீஹனீபா