நோன்பாளி பற்பசை பயன்படுத்துவதின் சட்டம்

بسم الله الرحمن الرحيم

பற்பசையைக் கொண்டு பற்களை சுத்தம் செய்வது நோன்பாளியின் நோன்பை முறித்து விடாது. அது மிஸ்வாக் குச்சியால் பல்துலக்குவதைப் போன்றே ஆகும்.

ஆனாலும், தனது வாயினுள் எதுவும் சென்று விடாமல் அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். அவருடைய நாட்டமின்றி தவறுதலாக எதுவும் வாயினுள் சென்று விட்டால் அவர் அந்த நோன்பை களா செய்ய வேண்டிய தேவையில்லை. (அவருடைய நோன்பு செல்லுபடியாகும்.)

பதிலளித்தவர்: அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)