Category Archives: அகீதா தொடர் வகுப்பு

அல்கவாஇதுல் அர்பஉ எனும் நூலுக்கான விளக்கவுரை – 02

بسم الله الرحمن الرحيم

அல்கவாஇதுல் அர்பஉ எனும் நூலின் முன்னுரை பற்றிய விளக்கம்.

1.    மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு இமாமவர்களின் பிரார்த்தனை…!

•    மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களை அல்லாஹ் பொறுப்பேற்கட்டும்!

•    அவர்கள் எங்கிருந்தாலும் அருள் பொருந்தியவர்களாக இருக்கட்டும்!

•    அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக அவர்களை மாற்றிவிடட்டும்!

•    பாவமன்னிப்புக் கேட்கும் மனோபாவத்தை அவர்களுக்கு உண்டாக்கட்டும்!

அல்கவாஇதுல் அர்பஉ எனும் நூலுக்கான விளக்கவுரை – 01

بسم الله الرحمن الرحيم

1.    அல்கவாஇத் என்ற அறபு வாசகத்தின் விளக்கம் யாது?

2.    அல்கவாஇத் என்ற பதத்தின் மூலம் யாது நாடப்படுகின்றது?

3.    இந்நூலின் உள்ளடக்கம் யாது?

4.    இந்நூலைக் கற்பதின் அவசியம் யாது?

“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

நான்காவது கவிதை அடி

ولكلهم قدر علا وفضائل لكنما الصديق منهم أفضل

அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.

அல் அகீததுல் வாஸிதிய்யா நூலுக்கான விளக்கவுரை – பாடம் 02

بسم الله الرحمن الرحيم

அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சுலாப்தீன்

பாடம் 02

சிலர் மரணித்துக் கப்ரில்

இருக்கின்றார்கள் – ஆனால்

இன்னும் உலகில் வாழ்ந்து

கொண்டிருக்கின்றார்கள்.

சிலர் இன்னும் உலகில்

வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் – ஆனால்

மரணித்தவரைப் போன்று

இருக்கின்றார்கள்.

அல் அகீததுல் வாஸிதிய்யா நூலுக்கான விளக்கவுரை – பாடம் 01

بسم الله الرحمن الرحيم

பித்அத்வாதிகளின் தொண்டையில் சிக்கிய ஒரு முல்தான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்)

பாடம் 01

# இல்மைத் தேடுகின்ற விடயத்தில் ஒருவர் எவ்வாறு இஹ்லாஸாக நடந்து கொள்ள வேண்டும்?

# இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவருடைய வாழ்க்கை மிகவும் விசாலமானது.

# அவருடைய பெயரும் பரம்பறையும்.

# ஹர்ரானிலிருந்து திமஷ்கை நோக்கி இமாமவர்களின் ஹிஜ்ரத்

# ஏன் ஷெய்குல் இஸ்லாம் என்ற பட்டப் பெயருடன் அழைக்கப் பட்டார்?

# ஆலுதைமியா என்ற குடும்பம்

# இமாமுடைய ஆசிரியர்கள் யார்?

# அவர்களுடைய சிறப்பைக் காட்டக்கூடிய மாணவர்கள்

# மத்ஹப்களில் இமாமுடைய நிலைப்பாடு

# எதிரிகளின் சதிகளால் இமாமவர்கள் கலீபா முன் நிறுத்தப்பட்டபோது தனது அகீதாவாக எதனை முன் வைத்தார்?

போன்ற பல விடயங்களை இந்த ஆரம்பப் பாடத்தை செவிமடுப்பதன் மூலம் இன்ஷா அல்லாஹ் கற்றுக்கொள்ள முடியும்.

[audio:http://www.salafvoice.org/audio_db/19929579.mp3]

Click Here to Download

‘லாமியா’ எனும் நூலுக்கான விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

சென்ற தொடரில் குறிப்பிடப்பட்ட கவிதை அடியின் இரண்டாவது பகுதியில் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்.”

“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

2. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஸஹாபாக்களை விரும்புவார்கள்.

அதற்கான ஆதாரங்களாவன:

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அன்ஸாரித் தோழர்களை விசுவாசியைத் தவிர வேறு எவரும் விரும்பமாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் வெறுக்கமாட்டார். எவர் அவர்களை விரும்புகின்றாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புவான். எவர் அவர்களை வெறுக்கின்றாரோ அவரை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்”. (புஹாரி, முஸ்லிம்)

“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 06

بسم الله الرحمن الرحيم

மூன்றாவது கவிதை அடி

حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل

“ஸஹாபாக்கள் அனைவரையும் விரும்புவது எனது போக்காகும். நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்”.

“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 05

بسم الله الرحمن الرحيم

இரண்டாவது கவிதை அடி

‘اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل’

“தனது பேச்சை உறுதிப்படுத்தியவாறு பேசக்கூடியவரின் பேச்சை செவிமடுங்கள்! அவர் தனது கருத்திலிருந்து திரும்பவோ அதை மாற்றிக்கொள்ளவோமாட்டார்.”

‘லாமியா’ எனும் நூலுக்கான விளக்கவுரை – 04

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகைகளில் ஆரம்பத் தக்பீருக்குப் பின்பு ஓதக்கூடிய துஆவிலே பின்வருமாறு கூறுவார்கள்: “சத்தியத்திலிருந்தும் எந்த விடயங்களில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டதோ அந்த விடயங்களில் உனது அனுமதியின் பிரகாரம் எனக்கு நேர்வழி வழங்குவாயாக! நிச்சயமாக நீ நாடியவருக்கு நேரான பாதையின் பால் வழி காட்டுகின்றாய்.” (முஸ்லிம்)