Category Archives: அல்குர்ஆன்

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 20

بسم الله الرحمن الرحيم

இது தொடர்பான விரிவான தகவல்களை அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா’ என்ற நூலில் காணலாம்.

எனவே, இக்கருத்து முரண்பாட்டிலிருந்து பின்வரக்கூடிய விடயங்களை அவதானிக்க முடிகின்றன.

• ‘சுதந்திரமான ஒரு பெண்மணி தனது முகத்தையும், கையையும் தவிர அனைத்து இடங்களையும் மறைப்பது வாஜிப்’ என்ற விடயத்தில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.  

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 19

بسم الله الرحمن الرحيم

(2) ஆடை அணியும் போது அதன் நிபந்தனைகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் அறிஞர்கள் பிரதானமாக எட்டு நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள்.

1. உடல் முழுவதையும் மறைக்க வேண்டும்.  இதற்குச் சான்றாக நாம் முன்பு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட ஸூரதுந் நூரின் 31ம் வசனத்தையும், ஸூரதுல் அஹ்ஸாபின் 59ம் வசனத்தையும் குறிப்பிடலாம்.

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 18

بسم الله الرحمن الرحيم

மேற்கூறப்பட்ட போதனைகளைத் தொடர்ந்து அல்லாஹுத்தஆலா, பெண்கள் தம் அலங்காரங்களை யார் யாருக்குக் காட்டலாம் என்பது பற்றிப் பேசுகின்றான். அதன் தொடரில்…

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 17

بسم الله الرحمن الرحيم

ஓர் அந்நியப் பெண் நோயுற்றிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு ஆண்கள் செல்ல முடியுமா?

ஓர் அந்நியப் பெண் நோயுற்றிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு ஆண்கள் செல்வதாக இருந்தால் இரு நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 16

بسم الله الرحمن الرحيم

எப்போது அன்னியப் பெண்களைப் பார்க்க முடியும்?

மேற்கூறப்பட்ட தகவல்களில் இருந்து அன்னியப் பெண்களைப் பார்ப்பது ஹராம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆயினும், சில நலவுகளை நாடி இஸ்லாம் அவர்களைப் பார்ப்பதை அனுமதித்துள்ளது.

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 15

بسم الله الرحمن الرحيم

பார்வையை தாழ்த்துதல்

قُلْ لِلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوَجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ الله خَبِيْرٌ بِمَا يَصْنَعُوْنَ

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக்காத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.” (அந்நூர்: 30)

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 14

بسم الله الرحمن الرحيم

வீட்டினுள் பிரவேசிக்கும் போதும், வீட்டைவிட்டு வெளியேறும் போதும் ஓதப்பட வேண்டிய துஆக்கள்

வீட்டினுள் பிரவேசிக்கும் போதும், வீட்டைவிட்டு வெளியேறும் போதும் ஓதுவதற்கென்று பிரத்தியோகமான சில துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்குர்ஆனை ஓதிய பின் “ஸதகல்லாஹுல் அளீம்” – மகத்துவமிக்க அல்லாஹ் உண்மை கூறிவிட்டான் – என்ற வார்த்தையைக் கூறலாமா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒரு மனிதன் “ஸதகல்லாஹுல் அளீம்” என்று கூறுவது, அல்லாஹ்வைப் புகழும் வார்த்தையாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. அல்லாஹ்வைப் புகழும் வார்த்தைகளைப் பொறுத்தவரையில் அவை இபாதத்தைச் சார்ந்தவைகளாகும்.

ஸூரதுன் நூர் விளக்கவுரை – 13

بسم الله الرحمن الرحيم

யாரிடத்தில் அனுமதி பெறவேண்டும்?

இப்னு ஜுரைஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: அதாஉ இப்னு அபீ ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன். “மூன்று வசனங்கள் உள்ளன, அவற்றை மனிதர்கள் புறக்கணிப்பவர்களாக நடந்து கொள்கிறார்கள். ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர் தான்’ (அல் ஹுஜுராத்: 13) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியிருக்க, உங்களில் பெரிய வீடுவாசல்களுடன் இருப்பவரே கண்ணியமிக்கவர் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். மேலும், இஸ்லாம் அனுமதி கேட்கச் சொன்ன சந்தர்ப்பங்களை மக்கள் கருத்தில் எடுத்துச் செயற்படாதவர்களாக இருக்கிறார்கள்.” அப்போது,