Category Archives: கட்டுரைகள்

பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதின் சிறப்புகள் – 01

بسم الله الرحمن الرحيم

பெண் குழந்தைகள் அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடைகளில் ஒன்றாகும். எப்போது நாம் அக்குழந்தைகளை வளர்க்கும் போது எம் மீது அல்லாஹ் விதியாக்கிய அடிப்படையில் செயலாற்றுகின்றோமோ அப்போது அவை அல்லாஹ்வின் நன்மதிப்பைப் பெற்ற அருளாக ஆகிவிடுகின்றன.

ரஜப் மாதத்தின் பித்அத்கள்

بسم الله الرحمن الرحيم

முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரசித்தி பெற்றுள்ள அவர்கள் மார்க்கமாக கருதி வருகின்ற ஒரு விடயமே ரஜப் மாதத்தின் சிறப்புக்களும் அதில் அமல் செய்வதின் சிறப்புக்களுமாகும். அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்கள் நான்காகும். அவை: தொடர்ந்தேர்ச்சியாக வரக்கூடிய துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மாதங்களும் மற்றும் ரஜப் மாதமுமாகும். இது தவிர வேறு எந்த சிறப்புக்களும் ரஜப் மாதத்திற்கு இல்லை.

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

5. பொறாமை

பொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

சத்தியம் என்று வருகின்ற போது, அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும்.

மீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 02

بسم الله الرحمن الرحيم

4.    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தது ரபீஉல் அவ்வல் பிறை       12 இலா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபீஉல் அவ்வல் பிறை 12 என்பது உறுதியான ஒரு தகவல் அல்ல. மாறாக சில வரலாற்றாசிரியர்கள் அத்தினம் பிறை 9 இலாகும் என உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மனிதர்களை இவ்வுலகில் படைத்ததன் நோக்கம் அவனை வணங்குவதற்கேயாகும். அவன் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றிபடைக்கவில்லை.

–     அத்தாரியாத்: 56

‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 02

بسم الله الرحمن الرحيم

லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்

1. அந்த இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது. மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்: நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்த இரவு இலகுவானதாகவும் ஒளிமயமானதாகவும் இன்னும் குளிரற்றதாகவும் சூடற்றதாகவும் காணப்படும்.” (இப்னு குஸைமா: 2190, இப்னு ஹிப்பான்: 3688)

‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வுடைய சிறப்புமிகு மாதமொன்று நம்மை வந்தடைந்து இருக்கின்றது. அதுதான் பரகத் பொருந்திய ரமழான் மாதமாகும். அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. (புஹாரீ:1899)

பள்ளிவாசல்களுக்காக எம் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! – 02

بسم الله الرحمن الرحيم

உயிர், உடைமைகள், மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்வது அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதைப் போன்றாகும்.

பள்ளிவாசல்களுக்காக எம் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! – 01

بسم الله الرحمن الرحيم

தற்போது நாம் பள்ளிவாசல்கள் இறைவிரோதிகளினால் தாக்கப்படுகின்ற காலகட்டத்தில் வாழ்கிறோம். பள்ளிசால்களைப் பொறுத்தளவில் அவை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குகின்றன. அவற்றுக்கென்று தனியான ஒரு கௌரவம் உள்ளது. அதனைப் பேணிப்பாதுகாப்பது முஸ்லிம்களாகிய எம்மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.