Category Archives: கட்டுரைகள்

அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள்.

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள் பல உள்ளன. அவற்றை நாம் கண்டறிந்து செயற்படுவோமென்றால் அவனின் கருணை நிச்சயமாக எங்களையும் வந்தடையும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய சில செயல்களை இங்கு நாம் இனங்காட்டுகின்றோம்.

சோம்பேறித்தனமும் அது உண்டாவதற்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும்.

بسم الله الرحمن الرحيم

சோம்பேறித்தனம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எச்சரித்த மிக மோசமான பண்பாகும். இப்பண்பின் காரணமாகவே ஓர் அடியான் வணக்கவழிபாடுகளை விட்டும் தூரமாகி விடுகின்றான். அவனுடைய நேரங்களும் வீணடிக்கப்படுகின்றன. மற்றும், இன்மை மறுமை வாழ்க்கை நஷ்டத்திற்குரியதாக ஆகிவிடுகின்றது.

எம் உள்ளங்கள் எவற்றை உள்வாங்க வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் செய்தியை இமாம்களான புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீர்பெற்றுவிட்டால் உடம்பு பூராகவும் சீர்பெற்றுவிடும்!

வீண் விரயத்தைத் தவிர்ப்போம்!

بسم الله الرحمن الرحيم

வீண் விரயம் என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் என்ற அறிஞர் கூறும்போது: “மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்” என்கிறார். (அல்முப்ரதாத் பீ கரீபில் குர்ஆன்)

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன.

அபூஅய்யூப், பிலால் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் நபியவர்களின் கப்ரைத் தொட்டு முத்தமிட்டார்களா?

 

بسم الله الرحمن الرحيم

கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமே என்று பரவலாக வட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் சம்பவத்தை முன்வைக்கின்றனர். பொதுவாகவே கப்ருபக்தி கொண்டவர்கள் அவர்களது கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையே முன்வைத்து வருகின்றனர் என்பது பொதுமக்களும் அறிந்த விடயமாகிவிட்டது. ஒரு சிலரின் தீர்ப்பை மாத்திரம் முன்வைத்து ஏனைய இமாம்களின் தீர்ப்புக்களை ஆழமாக ஆராயாமல் முடிவு காணக்கூடியவர்களே இவர்கள்.

பள்ளிவாசல்களின் கண்ணியத்தைப் பாதுகாப்போம்!

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மேலானவனாகவும் மகத்துவம் மிக்கவனாகவும் இருக்கின்றான். அவனது மேலான தன்மை மற்றும் மகத்துவம் ஆகியன அவனை மேன்மைப்படுத்துவதின் மூலமும் மகத்துவப்படுத்துவதின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன.

நீ எங்கிருந்த போதிலும் மரணம் உன்னை வந்தடையும்!

بسم الله الرحمن الرحيم

படைப்பாளனாகிய அல்லாஹுத்ஆலாவின் மாபெரும் படைப்புக்களில் ஒன்றே வாழ்க்கையும் மரணமுமாகும்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: ‘அவன் எத்தகையவனென்றால், உங்களில் சிறந்த முறையில் நற்காரியத்தில் ஈடுபடுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான்.’ (அல்முல்க்: 02)

இத்தரணியில் சீர்திருத்தவாதிகளாய் வாழ்ந்திடுவோம்! – 02

 بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா ஒவ்வோர் அடியானுக்கும் அவரவருடைய எண்ணத்திற்குத் தக்க விதத்தில் கூலி கொடுக்கின்றான். எவருடைய எண்ணத்தில் சீர்திருத்தம் உள்ளது? மற்றும் எவருடைய எண்ணத்தில் சீர்குலைத்தல் உள்ளது என்பதை அவன் நன்கறிவான்.

இத்தரணியில் சீர்திருத்தவாதிகளாய் வாழ்ந்திடுவோம்! – 01

بسم الله الرحمن الرحيم

மனிதன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் அவனுக்கு எந்த ஒன்றைக் கொண்டு இணைவைக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளான். இத்தகைய நோக்கத்தில் படைக்கப்பட்ட மனிதன் பூமியை நல்லவற்றைக் கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்றும் அதில் நல்லவற்றைத் தவிர வேறு எதனையும் பரப்பிவிடக்கூடாது என்றும் வழிகாட்டப்பட்டுள்ளான்.