Category Archives: சிட்டுக்கள்

கன்ஸுல் அத்பால் – 02

بسم الله الرحمن الرحيم

51. மறுமை நாளில் மனிதர்களுக்கு மத்தியில் முதலாவது தீர்ப்பளிக்கப்படும் விடயம் யாது?

•    அல்லாஹ்வின் உரிமைகளில் முதலாவது விசாரிக்கப்படுவது தொழுகையாகும். அதேபோன்று, படைப்பினங்களின் உரிமைகளில் முதலாவது விசாரிக்கப்படுவது (அநியாயமாக) சிந்தப்பட்ட இரத்தமாகும்.

கன்ஸுல் அத்பால் – 01

بسم الله الرحمن الرحيم

1.   “பரகத்” என்றால் என்ன?

•   பரகத் என்பது ஒரு விடயத்தில் இறை நலவு நிலைத்திருப்பதாகும்.

2.   ஒரு நூற்றாண்டின் கால எல்லை யாது?

•   நூறு வருடங்கள்

3.   தீய காரியங்கள் உண்டாவதற்குத் துணை நிற்கும் மூலப் பொருள் யாது?

•   மதுபானம்

கையடக்கத் தொலைபேசியில் விளையாட்டுக்கள் – games – விளையாடுவதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

விடை: அவைகளில் உருவம் இருந்தால் அவை கூடாது. ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீ எந்த ஓர் உருவத்தையும் அழிக்காமல் விட்டுவிடாதே!

அரேபியப் பழமொழிகளும் நற்சிந்தனைகளும்

1. ஒரு மனிதனின் ஒழுக்கம் அவனுடைய தங்கத்தைவிடச் சிறந்தது!

2. ஒழுக்கம் என்பது செல்வமாகும்! அதை உபயோகிப்பது பூரணமாகும்!

3. அறிவின் ஆபத்து மறதியாகும்!