Category Archives: செய்திகள்

புதிய மாணவர் தெரிவு – 1438/2017
அல்கமா அறபுக் கல்லூரி
بسم الله الرحمن الرحيم
- அல்கமா அறபுக் கல்லூரி தனது மனனப் பிரிவுக்கும் கிதாப் பிரிவுக்கும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் எதிரிகளால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை, இந்தியா வாழ் ஸலபி சகோதரர்களுக்கு ஓர் நல்லுபதேசம்.
بسم الله الرحمن الرحيم
இலங்கை, இந்தியா வாழ் ஸலபி சகோதரர்களுக்கு ஓர் நல்லுபதேசம்.
உரை நிகழ்த்தியவர்: அஷ்ஷேய்ஹ் அபூ பிலால் அல் ஹல்ரமீ حفظه الله تعالى
11 ஷவ்வால் 1437 (16 ஜூலை 2016)
கேள்வி:
இலங்கையிலும் இந்தியாவிலும் அல்லாஹ்வுடைய எதிரிகள் மக்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காகவும், ஸலபிக்கொள்கையை விட்டும், இஸ்லாத்தை விட்டும் தடுப்பதற்காக வேண்டியும், ஸலபிக்கொள்கையை பின்பற்றுகின்ற சகோதரர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் பயமுருத்தல்களையும் நெருக்கடிகளையும் போட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
எனவே நீங்களும்; மாணவர்களும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நாம் ஆசை வைக்கின்றோம்.
மேலும் அவர்களை உறுதிப்படுத்துவதற்காக உம்மிடமிருந்து சிரியதொரு உரையையாவது வேண்டிக்கொள்கிறோம்.

புதிய மாணவர் தெரிவு – 1436/2015
بسم الله الرحمن الرحيم
அல்கமா அறபுக் கல்லூரி
அல்கமா அறபுக் கல்லூரி தனது முழு நேரக் கற்கை நெறி மற்றும் பகுதி நேரக் கற்கை நெறிக்குமான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

நவீன ஜஹ்மிய்யாக்களுக்கான பகிரங்க மறுப்பு!!!
بسم الله الرحمن الرحيم
05.01.2014 அன்று பலகத்துறை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடந்தேறியது ஏகத்துவ ஷரீஆ மாநாடா? அல்லது இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் குப்ரை விதைப்பதற்கான அங்குரார்ப்பண மாநாடா?
இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் குப்ரையும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் உண்டுபன்னுவதற்காக அரங்கேற்றப்பட்ட முதல் அங்குரார்ப்பண மாநாடு 05.010.2014 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை பலகத்துறை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று சொல்பவரும் அல்லாஹ்வுக்குரிய பண்புகளை உறுதிப்படுத்தியவரும் காபிராகிவிடுவார் என்ற கருத்தை வலுப்படுத்துவதற்காக கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளர் மௌலவி நூஸ்ரானும் அவருடன் வந்தவர்களும் பகீரதப் பிரயத்தனம் எடுத்தார்கள்.

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை
بسم الله الرحمن الرحيم
இந்நூல் இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களை இனம்காட்டும் நூலாகும். உண்மையில் இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள் பல உள்ளன. அவற்றிலிருந்து பிரதானமான பத்து காரியங்களை முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்நூலில் பட்டியல்படுத்தியுள்ளார்கள்.

புதிய மாணவர் தேர்வு – 2014
بسم الله الرحمن الرحيم
மத்ரஸா அல்கமா
56/1, தக்கியா வீதி, போருதொட, கொச்சிக்கடை
எமது மத்ரஸா அல்கமா அறபுக் கல்லூரி, 2014 ஆம் ஆண்டிக்கான புதிய மாணவர் தேர்வை நடாத்தத் தீர்மானித்துள்ளது.