Category Archives: தொழுகை

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 03

بسم الله الرحمن الرحيم

9. பல நலவுகள், அபிவிருத்திகள் மற்றும் நற்கூலிகள் போன்றன கைகூடாமல் போய்விடும். நபியவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் இஷா தொழுகையில் இருக்கின்ற நலவையும் ஃபஜ்ர் தொழுகையில் இருக்கின்ற நலவையும் அறிவார்களென்றால் அவற்றுக்கு துவண்டு துவண்டாவது போய் சேருவார்கள்.” (ஸஹீஹுல் ஜாமிஉ)

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

5. இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் இஷாத் தொழுகையில் ஜமாஅத்துடன் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரவின் அரைவாசிப் பகுதி நின்று வணங்கிய கூலி கிடைக்கும். மேலும், யார் இஷாத் தொழுகையையும் ஃபஜ்ர் தொழுகையையும் ஜமாஅத்தாகத் தொழுகின்றாரோ அவருக்கு இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியைப் போன்ற ஒன்று கிடைக்கும்.” (திர்மிதி)

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

உண்மையான நஷ்டமென்பது அல்லாஹுத்தஆலா வஹி மூலம் எமக்கு இனங்காட்டிய நஷ்டமாகும். மனிதன் வியாபாரம், கற்றல், மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஏற்படக்கூடிய இழப்புக்களை நஷ்டமாகப் பார்க்கிறான். மாறாக, இவைகள் எதார்த்தமான நஷ்டமாகக் கருதப்படமாட்டாது.

தராவீஹ் தொழுகையை பள்ளிவாசலில் கூட்டாகத் தொழுவது பித்அத்தாகுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சில தினங்களுக்கு முன்பு ஒரு நபர் பள்ளிவாசலில் எழுந்து “கூட்டான அமைப்பில் தராவீஹ் தொழுவது (ஆதாரங்களில்) உறுதி செய்யப்படாத அம்சமாகும், ஒரு மனிதன் தனது வீட்டில் (நபிலான தொழுகைகளைத்) தொழுவதே மிகச் சிறந்ததாகும்” என்று கூறினார். இக்கூற்றின் தீர்ப்பு என்ன?

சுத்ராவின் சட்டங்கள்

بسم الله الرحمن الرحيم

‘சுத்ரா’ என்பதன் விளக்கம்

தொழக்கூடியவர் தனக்கு முன்னால் கடந்து செல்வோரை தடுக்கும் நோக்கில் தனக்கு முன்பாக வைக்கும் பொருள் ‘சுத்ரா’ எனப்படும்.

நபிவழியில் ஜனாஸாத் தொழுகை – 02

بسم الله الرحمن الرحيم

8. இரண்டாவது தக்பீருக்குப் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.

இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு நபித்தோழர் பின்வருமாறு கூறுகின்றார்: “ஜனாஸாத் தொழுவிக்கும்போது இமாம் தக்பீர் கூறி குர்ஆனின் ஆரம்பமாகிய சூரதுல் பாதிஹாவை முதலாவது தக்பீருக்குப் பின்  தனது உள்ளத்தால் சத்தமின்றி ஓதி பின்பு ஏனைய மூன்று தக்பீர்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறி,  ஜனாஸாவுக்கு உளத்தூய்மையுடன் துஆச் செய்வதும் சுன்னாவாகும்.

நபிவழியில் ஜனாஸாத் தொழுகை – 01

முன்னுரை

بسم الله الرحمن الرحيم

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்! இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக.

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது ஜனாஸாத் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு தொகுப்பாகும். ஏனைய தொழுகைகள் எவ்வாறு நபிவழியில் தொழப்பட வேண்டுமோ அவ்வாறே ஜனாஸாத் தொழுகையும் நபிவழியில் தொழப்பட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நான் எவ்வாறு தொழ நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்.” (புஹாரி)

சுத்ரா பற்றித் தெரிந்து கொள்வோம் – 05

بسم الله الرحمن الرحيم

சுத்ராவுக்குப் பின்னால் ஒருவர் கடந்து சென்றால் அல்லது, சுத்ராவுக்குத் தொலைவில் உள்ள ஓர் இடத்தால் ஒருவர் சென்றால் அதனுடைய சட்டம் யாது?

இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அல்முங்னி (3/102) எனும் நூலில் கூறும்போது: “யார் சுத்ராவை நோக்கித் தொழுகிறாரோ அவருடைய சுத்ராவுக்குப் பின்னால் தொழுகையைத் துண்டிக்கக்கூடிய ஒன்று கடந்து சென்றால் அவருடைய தொழுகை துண்டிக்கப்படமாட்டாது.

பெருநாள் தினம் வெள்ளிக்கிழமையில் வந்தால்…. !

بسم الله الرحمن الرحيم

கேள்வி: பெருநாள் தினமானது வெள்ளிக்கிழமையில் வந்தால் ஜும்ஆத் தொழுகையின் சட்டம் யாது? அதனை நிலைநாட்டுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் வாஜிபாக அமையுமா? அல்லது, ஒரு சாராருக்கு மாத்திரம் உரியதாக இருக்குமா? ஏனெனில், அவ்வாறு பெருநாள் தினம் வெள்ளிக்கிழமையில் வந்தால் ஜும்ஆ கிடையாது என்று சில மனிதர்கள் நினைக்கிறார்கள். (எனவே, இதன் நிலைப்பாடு குறித்து யாது கூறுவீர்கள்?)

தொழக்கூடாத பத்து இடங்கள்

بسم الله الرحمن الرحيم

1.   அடக்கஸ்தலம்

அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்)