Category Archives: நோன்பு

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

بسم الله الرحمن الرحيم

முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா?

முஹர்ரம் மாதம் பிறக்கும்போது சில முஸ்லிம்கள் வாழ்த்துத் தெரிவிப்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்பது குறித்த அறிஞர்களின் சில பத்வாக்களை நாம் இங்கு பதிய வைத்திருக்கின்றோம்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகளும் தொடர்ச்சியாக நோற்கப்பட வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم

விடை: ஷவ்வால் மாத ஆறு நோன்புகளும் தொடர்ச்சியாக நோற்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையல்ல.

ஷவ்வால் மாத ஆறு நாட்கள் நோன்பின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

விடை: ஷவ்வால் மாத ஆறு நாட்கள் கொண்ட நோன்பை நோற்பது அதிகமான அறிஞர்களின் கருத்துக்களின்படி விரும்பத்தக்கதாகும்.

‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 02

بسم الله الرحمن الرحيم

லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்

1. அந்த இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது. மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்: நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்த இரவு இலகுவானதாகவும் ஒளிமயமானதாகவும் இன்னும் குளிரற்றதாகவும் சூடற்றதாகவும் காணப்படும்.” (இப்னு குஸைமா: 2190, இப்னு ஹிப்பான்: 3688)

‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வுடைய சிறப்புமிகு மாதமொன்று நம்மை வந்தடைந்து இருக்கின்றது. அதுதான் பரகத் பொருந்திய ரமழான் மாதமாகும். அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. (புஹாரீ:1899)

இஃதிகாப் இருக்கும் மிகக் குறைவான காலம்

இஃதிகாப் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மிகக் குறைவான காலம் எது? என்பது தொடர்பான விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன.

நாட்காட்டிகளில் காணப்படும் ஸஹர் முடிவு நேரம் என்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சில நாட்காட்டிகளில் ரமழான் மாதத்தில் ஸஹர் முடிவு நேரம் என்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். அந்நேரம் பஜ்ர் தொழுகைக்குப் பத்து நிமிடங்கள் அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு முன் நியமிக்கப்படுகின்றது. இதற்கு சுன்னாவில் ஆதாரம் உண்டா? அல்லது இது பித்அத்தைச் சார்ந்தா?

சூரியன் மறைந்துவிட்டது என்று கருதி நோன்பை திறப்பதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

மேகமூட்டம் போன்றவற்றின் காரணமாக சூரியன் மறைவதை உறுதிப்படுத்தப்படுத்த முடியாத நிலை இருந்தால் இவ்வாறு நோன்பைத் திறப்பது கூடும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

தராவீஹ் தொழுகை நடாத்தப்படும் போது இமாமுக்குப் பின்னால் இஷாத் தொழலாமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி:  இஷாத் தொழாத நிலையில் பள்ளிவாசலுக்கு சமுகம் தந்த ஒருவர் அங்கு ஜமாஅத்தாக நடைபெறும் தராவீஹ் தொழுகையில் இஷாவுடைய நிய்யத்துடன் இணைந்து தொழலாமா?

பருவமடையாத சிறுவன் நோன்பு நோற்பதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

சிறுவனாக உள்ளவன் நோன்பு நோற்பது நாம் முன்பு குறிப்பிட்டது போன்று அவனுக்கு கட்டாயமானதல்ல.