Category Archives: பெண்களுக்கு

பெண்கள் அலங்காரம் – 09

بسم الله الرحمن الرحيم

முடிக்கு சாயம் பூசுதல்

முடிக்கு சாயம் பூசி நிறம் மாற்றுவது தொடர்பாக சில செய்திகள் நபியவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளன. அவற்றுள் பின்வரும் நபிமொழிகளை இனங்காட்டலாம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபியவர்களிடத்தில் அபூகுஹாபா மக்கா வெற்றியின்போது கொண்டுவரப்பட்டார். அவருடைய தலை ஸகாமா என்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூவின் நிறமாக வெள்ளை நிறத்தால் காணப்பட்டது. அதற்கு நபியவர்கள்: “இதனை ஏதாவது ஒன்றைக் கொண்டு மாற்றிவிடுங்கள்! கறுப்பைத் தவிர்ந்து கொள்ளுங்கள்!” என்றார்கள். (முஸ்லிம்)

பெண்கள் அலங்காரம் – 08

بسم الله الرحمن الرحيم

பெண்கள் தங்கள் தலைமுடிகளைத் தலையில் கூட்டிக்கட்டிய நிலையில் வீட்டைவிட்டும் வெளியேறிச் செல்ல முடியுமா?

கேள்வி: ஒரு பெண் தன்னுடைய முடியைத் தனது தலைக்கு மேல் கூட்டிக் கட்டுவதின் சட்டம் யாது?

பதில்: இக்கேள்விக்கு அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள்: “தலைமுடியானது தலைக்கு மேலால் கூட்டிக் கட்டப்பட்டால் அதனை உலமாக்கள் நபியவர்களைத் தொட்டும் பதிவான, புக்த் எனும் வகையைச் சேர்ந்த சாய்ந்த இரு திமிலிகளையுடைய ஒட்டகத்தைப் போன்று முடிகளையுடைய பெண்கள் தொடர்பான ஹதீஸில் இடம்பெறும் தடை அல்லது, எச்சரிக்கைக்குள் அவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கூறுகின்றார்கள்.

பெண்கள் அலங்காரம் – 07

بسم الله الرحمن الرحيم

வாடகைக்குக் கொடுக்கப்படும் முடியை வாங்கித் தலையில் அணிவதின் சட்டம்

வாடகைக்கு வாங்கிய முடியைத் தலையில் சூடலாமா? என்பது தொடர்பாக அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது பின்வருமாறு பதிலளித்தார்கள்.

பெண்கள் அலங்காரம் – 06

بسم الله الرحمن الرحيم

முடியைக் கூட்டிக் கட்டுவதும் அதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்குமான சட்டதிட்டங்கள்

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்களிடத்தில் முடியைக் கூட்டிக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் நூல் வகைகள் (hair bows) மற்றும் கிளிப் (hair clips) வகைகள் போன்றன தொடர்பான சட்டம் யாது? என்று வினவப்பட்ட போது அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு…

பெண்கள் அலங்காரம் – 05

بسم الله الرحمن الرحيم

தலைமுடியை பின்னல்களாகப் பின்னுதல்

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹ் எனும் நூலில் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் அறிவிப்பதாவது: (உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:) “நான் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்று,) அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் தலையில் கனத்த பின்னல்களைக் கொண்ட பெண்மணியாக இருக்கின்றேன்.

பெண்கள் அலங்காரம் – 04

بسم الله الرحمن الرحيم

தலைமுடியைப் பிரித்து வாருதல்

பெண்கள் தலைவாரும் போது தலையின் ஒரு புறத்தால் பிரித்து வாருவதின் சட்டம் யாது? என்பது தொடர்பாக அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வினவப்பட்டபோது: “முடியை தலையின் மத்திய பகுதியால் பிரித்து வாருவதே சுன்னாவான நடைமுறையாகும்.

பித்னாக்களில் இருந்தும் பாதுகாப்புப் பெற்றவரே மனமகிழ்ச்சிக்குரியவராவார்!

بسم الله الرحمن الرحيم

இவ்வுரையானது அபூதாவுத் எனும் கிரந்தத்தில் மிக்தாத் இப்னுல் அஸ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவான: நிச்சயமாக மனமகிழ்ச்சிக்குரியவர் சோதனைகளில் இருந்தும் பாதுகாப்புப் பெற்றவராவார் என நபியவர்கள் மூன்று முறை கூறிவிட்டு, மேலும் எவர் சோதனைக்குள்ளாகும் போது பொறுமையைக் கடைபிடிக்கிறாரோ அவரைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது என்ற ஹதீஸின் தெளிவை மையப்படுத்திக் காணப்படுகின்றது. இத்தெளிவுரையை யமன் நாட்டில் இருந்து தஃவா நோக்கமாக இலங்கையிலுள்ள அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலை நோக்கி விஜயம் செய்ய அஷ்ஷெய்க் அபூ முஹம்மத் அப்துல் ஹமீத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கடந்த 14 ஷஃபான் 1435 (12 ஜூன் 2014) ந் தினத்தன்று நிகழ்த்தினார்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சமயமே குழுமியிருந்தவர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. அதனையே இங்கு பதிவு செய்துள்ளோம்.

பெண்கள் அலங்காரம் – 03

بسم الله الرحمن الرحيم

பெண்களுக்கு தங்கள் முடிகளை முழுமையாக வழித்துக் கொள்ள அனுமதியுள்ளதா?

தலையை முழுமையாக வழித்தல் பெண்களுக்கு உரியதன்று, நிச்சயமாக தலை முடியைக் குறைப்பதே அவர்களுக்குரியதாகும் என நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

–     அபூதாவுத், அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

பெண்களும் மார்க்கக் கல்வியும்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வை வணங்குவது அனைத்து முஸ்லிமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏவப்பட்ட விடயமாக இருக்கின்றது. அல்லாஹ்வை சரியான முறையில் வணங்கி அவன் கூறிய பிரகாரம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு எங்களுக்கு பூரண மார்க்க அறிவு தேவைப்படுகின்றது. எனவே, மார்க்க அறிவைத் தேடுவது ஆண், பெண் வேறுபாடின்றி அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

– ஸஹீஹுன் நஸாஈ

பெண்கள் அலங்காரம் – 02

بسم الله الرحمن الرحيم

சிகை அலங்காரம்

அல்லாஹுத்தஆலா தனது அடியார்கள் மீது புரிந்த அருட்கொடைகளில் ஒன்றாக முடியைக் குறிப்பிடலாம். இம்முடி மனிதனின் அழகிற்குப் பெரும் ஆதாரமாக விளங்குகின்றது. மேலும், இது அற்றுப் போகின்ற சந்தர்ப்பத்தில் பெரும் குறையாகவும் அசிங்கமாகவும் காட்சியளிக்கின்றது. சான்றாக இமாம்களான புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் அறிவிப்புச் செய்த பனூஇஸ்ரவேலர்களைச் சோர்ந்த குஷ்டரோகம், வழுக்கை, கண்பார்வையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 3 நபர்களினது வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.