Category Archives: மன்ஹஜ்

புத்திக்கல்ல முதலிடம்! குர்ஆன் ஸுன்னாவுக்கே!

بسم الله الرحمن الرحيم

இமாம் பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! நிச்சயமாக மார்க்கமாகிறது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். மாறாக, மனிதர்களின் புத்திகள் மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உண்டாக்கப்பட்டதல்ல. எனவே, அது தொடர்பான அறிவு அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் உள்ளது.” (ஷர்ஹுஸ் ஸுன்னா)

அறிவின் ஆரம்பம் ஏமாற்றம் தரக் கூடியதே!

بسم الله الرحمن الرحيم

(மார்க்க) அறிவைத் தேடும் மாணவன் அது விடயத்தில் அவசரப்படுதல், கற்பித்தல் பணியை மேற்கொள்ள முற்படுதல், மார்க்கத் தீர்ப்பு வழங்குதல் மற்றும் தான் உறுதியாவதற்கு முன்னர் மக்கள் மன்றத்தில் பிரசித்தியை எதிர்பார்த்தல் போன்ற பண்புகளைத் தவிர்ந்தாக வேண்டும்.

அழைப்புப் பணி நோக்கில் பித்அத் வாதிகளின் இஸ்தலங்களை நாடிச் செல்லல்.

بسم الله الرحمن الرحيم

கேள்வி: பித்அத் வாதிகளின் பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்கள் பேன்றவற்றை நாடிச் சென்று உரை நிகழ்த்தல் மேலும், பாடங்கள் நடாத்தல் போன்ற நோக்கிற்காக (அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்) செல்லக்கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ், இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் போன்ற அறிஞர்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட நஜ்ரான் நாட்டு கிரிஸ்தவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள் அல்லவா?!

ஆர்ப்பாட்டம் செய்து உரிமைகளை வென்றொடுப்பது இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிமுறையா? – 02

بسم الله الرحمن الرحيم

அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைக் கேட்தாக ஸைத் இப்னு வஹப் அவர்கள் அறிவிக்கின்றார்கள். நிச்சயமாக நீங்கள் எனக்குப் பின்னால் உரிமை பறிக்கப்படுவதையும் நீங்கள் வெறுக்கும் காரியங்களையும் காண்பீர்கள் என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், எங்களுக்கு எதனைக் கட்டளையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள், நீங்கள் அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுங்கள் உங்கள் உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்.

–     புகாரி

இந்த நபி மொழியில் எங்கள் உரிமைகளை அல்லாஹ்விடம் கேட்குமாறு நபியவர்கள் கூறுகின்றார்கள். மனிதர்களிடம் எமது உரிமைகளைத் தாருங்கள்! என்று தலை சாய்க்கக் கூடாது என்று மிகவும் தெளிவாக நபியவர்கள் கூறுகின்றார்கள்.

ஆர்ப்பாட்டம் செய்து உரிமைகளை வென்றொடுப்பது இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிமுறையா? – 01

بسم الله الرحمن الرحيم

ஆர்ப்பாட்டம் என்றால் என்ன?

ஒரு கருத்தை நிலை நாட்டுவதற்கு அல்லது ஒரு வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதையில் அல்லது ஓர் இடத்தில் ஒன்று கூடுவது அல்லது பாதைகளில் நடந்து செல்வது ஆர்ப்பாட்டம் எனப்படும்.

ஸலப்களின் பாதை

بسم الله الرحمن الرحيم

ஸஹாபாக்கள் மற்றும் ஏனைய முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களது வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது அல்குர்ஆனுக்கோ அல்லது அஸ்ஸுன்னாவுக்கோ அவை முரண்பட்டாலும் சரியே என்பதல்ல.