Category Archives: மறுப்புகள்

மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 02

بسم الله الرحمن الرحيم

மூன்றாவது வாதம்:

பின்வரும் ஹதீஸை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடம் அதுபற்றி வினவியபோது அவர்கள் அத்தினம் தான் பிறந்த தினம் என்றும் தனக்கு வேதம் இறக்கப்பட்ட தினம் என்றும் கூறினார்கள்.

– முஸ்லிம், அஹ்மத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்த தினத்தை இந்த ஹதீஸில் சிறப்பித்திருக்கின்றார்கள். எனவே, இத்தினத்தில் நாம் அவர்களது பிறப்பை நோன்பு அல்லது திக்ர் அல்லது ஸலவாத் அல்லது ஸதகா ஆகியவைகளை மேற்கொள்வதைக்கொண்டு கொண்டாடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 01

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட கொண்டாடாத அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் அசத்தியவாதிகள் அவர்களது இந்நிலைப்பாட்டை சரிகாண்பதற்காக வேண்டி அல்குர்ஆனிலிருந்தும் அஸ்ஸுன்னாவிலிருந்தும் ஒரு சில ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாதாரங்களை முறையற்று விளங்கியதின் காரணமாக அவர்கள் இந்நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றார்கள். மேலும், அவர்கள் ஒரு சில புத்தி ரீதியான வாதங்களையும் முன்வைத்து அவர்களது கருத்தை வலுப்படுத்தியுள்ளார்கள்.

ஷிர்க்குடைய வரலாற்றுத் தடயங்களையும் சமாதிகளையும் பாதுகாத்துத்தானா முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?!

بسم الله الرحمن الرحيم

“கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும்” என்ற நூல் வெளியீட்டு வைபவத்தில் பேராதனைப் பல்கலைக்கழக  விரிவுரையாளர் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்களால் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் முன்வைக்கப்பட்ட கருத்திற்கான பகிரங்க மறுப்பு.

அபூஅய்யூப், பிலால் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் நபியவர்களின் கப்ரைத் தொட்டு முத்தமிட்டார்களா?

 

بسم الله الرحمن الرحيم

கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமே என்று பரவலாக வட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் சம்பவத்தை முன்வைக்கின்றனர். பொதுவாகவே கப்ருபக்தி கொண்டவர்கள் அவர்களது கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையே முன்வைத்து வருகின்றனர் என்பது பொதுமக்களும் அறிந்த விடயமாகிவிட்டது. ஒரு சிலரின் தீர்ப்பை மாத்திரம் முன்வைத்து ஏனைய இமாம்களின் தீர்ப்புக்களை ஆழமாக ஆராயாமல் முடிவு காணக்கூடியவர்களே இவர்கள்.

அவதூறு பரப்பி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் அற்பர்கள்

மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யாவுக்கு எதிராக

விடிவெள்ளிப் பத்திரிகை, மீள்பார்வை   இணையதளம், மற்றும் சமூக வலையதளங்களில்

பித்னாவை (குழப்பங்களை) ஏற்படுத்திவரும் அற்பர்களுக்கான ஒரு பகிரங்க மறுப்பு.

‘காபிர்களின் பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது ஹராம்’ – 01

உரை: அஷ்ஷெய்ஹ் அபூஅப்திர்ரஹ்மான் நவ்வாஸ் அல்ஹின்தீ ஹபிளஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு: அபூஹுனைப் ஹிஷாம் இப்னு தவ்பீக்

இடம்: மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை,இலங்கை.

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பித்அத்வாதியா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: நீங்கள் ஜும்ஆவின் ஆரம்ப அதானை பித்அத் என்று கூறுவீர்களாயின் அதை உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்தபோது அவரும் பித்அத்வாதியாகிவிடுவாரா?

பதில்: “அல்லாஹ் என்னைக் காத்தருள்வானாக! உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நேர்மையான ஒரு கலீபா ஆவார். (அவரைப் பற்றி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ‘மலாஇகாமார்கள் வெட்கப்படக்கூடிய ஒருவர் குறித்து நான் வெட்கப்படாமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது?’ எனக் கேட்டார்கள்.

நவீன ஜஹ்மிய்யாக்களுக்கான பகிரங்க மறுப்பு !!!

بسم الله الرحمن الرحيم

05.01.2014 அன்று பலஹத்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஏகத்துவ ஷரீஆ மாநாட்டில் கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளரும் அவருடன் வந்த குழுவினரும் நிகழ்த்திய உரைகளில் மீண்டும் ஜஹ்மிய்யாக் கொள்கையை நிலைநாட்டும் முகமாக…

யார் காபிர்?

 

بسم الله الرحمن الرحيم

கம்பஹா மாவட்ட ஜம்;இய்யத்துல் உலமா செயலாளரும்  பஸ்யாலையைச் சேர்ந்தவருமான  மௌலவி நுஸ்ரான் அவர்கள் 27.12.2013 பலகத்துறை தக்கியாப் பள்ளிவாசலில் நிகழ்த்திய  ஜும்ஆ உரையில்….