Category Archives: வியாபாரம்

வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

3. பொய்யும் பொய் சத்தியமும்

வியாபாரஸ்தலங்களில் காணப்படும் மற்றுமொரு தவறான அம்சம் பொய்யும் பொய் சத்தியமுமாகும். இத்தவறான அம்சங்களை கொடுக்கல் வாங்கலின் போது வெளிப்படுத்துவது அவற்றில் காணப்படும் அபிவிருத்தியை அற்றுப்போகச் செய்யக் கூடியனவாக இருக்கின்றன என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

தீமையை எப்போதும் ஒரு கூட்டத்தார் முன்னின்று தடுக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “இன்னும், (விசுவாசங் கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார் அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும் நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும் தீய செயல்களில் இருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும்! அவர்களே தாம் வெற்றிபெற்றோர்”. (ஆலு இம்றான்: 104)

நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டவருடன் வியாபாரம் செய்யலாமா?

بسم الله الرحمن الرحيم

ஒரு ஹதீஸில் நபியவர்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டவருடன் வியாபாரம் செய்வதைத் தடுத்துள்ளார்கள். அச்செய்தி அஹ்மத், அபூதாவுத், பைஹகி போன்ற கிரந்தங்களில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், அதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாலிஹ் இப்னு ருஸ்தும் அல்ஹஸ்ஸாஸ் என்ற ஒருவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படாதவராக உள்ளார்.

வியாபாரத்தில் ஈடுபடுபவர்களே! இதோ உங்களுக்கு ஓர் உபதேசம்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலாவினது ஹலாலான ரிஸ்க்கை ஒரு மனிதன் தேடிக்கொள்ளும் பொருட்டு இஸ்லாம் வியாபாரத்தை ஹலாலாக்கியிருக்கின்றது. ஒரு மனிதன் தனது குடும்பத்தை வறுமையிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழியாகவும் இந்த வியாபாரம் அமைந்திருக்கின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கினான், வட்டியை ஹராமாக்கினான்.” (அல்பகறா: 275)