Category Archives: ஸலபுகளின் அடிச்சுவடுகள்

எம் முன்னோர்களின் முத்துப் பெட்டகத்திலிருந்து …. 03

بسم الله الرحمن الرحيم

எண்ணிக்கையைப் பார்த்து சத்தியத்தை எடை போடாதீர்கள்!

நேர்வழியைப் பின்பற்று! அதில் செல்வோர் சொற்பம் என்பது உன்னைப் பாதிக்காது, வழிகேட்டைவிட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்! அதில் அழிந்து போவோர் அதிகம் என்பதால் ஏமாறிவிடாதே!

–     இமாம் புழைல் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ்

எம் முன்னோர்களின் முத்துப் பெட்டகத்திலிருந்து …. 02

بسم الله الرحمن الرحيم

என்றும் நிறைவுறாத இன்பத்தை வாங்க…!

வாழ்வின் ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியா முத்தாகும். அதனைக் கொண்டு என்றென்றும் நிறைவுறாத இன்பத்தை வாங்க முடியும்.

–    இமாம் இப்னுல் கையிம்

நம் முன்னோர்களின் முத்துப் பெட்டகத்திலிருந்து…..

بسم الله الرحمن الرحيم

“மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட

 அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள்.

ஏனெனில் மனிதன் ஒரு நாளில்

உணவு மற்றும் குடிபானம் ஆகியவற்றில்

ஒரு தடவை அல்லது இரு தடவைகள்

 நாட்டமுடையவனாக இருக்கின்றான்.

மாற்றமாக அவன் அறிவின்பால் ஒரு நாளில்

விடும் மூச்சுக்களின் அளவு

 நாட்டமுடையவனாக இருக்கின்றான்.” 

(இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ்)