Category Archives: ஹதீஸ்கள்

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 11

بسم الله الرحمن الرحيم

இரண்டாவது ஹதீஸ்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு படையினர் கஃபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்.

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 10

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸின் தொடர்ச்சியில் கூறுகின்றார்கள்: “எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் இருக்கின்றதோ அவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்குமாகவே இருக்கும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ள நாடும் உலகத்திற்காக வேண்டி அல்லது திருமணம் செய்து கொள்ள நாடும் பெண்ணுக்காக வேண்டி அமைகின்றதோ அவருடைய ஹிஜ்ரத்  அவரால் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே இருக்கும்.”

ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

ஹதீஸ் விளக்கம்

இந்த ஹதீஸ் குறித்து மார்க்க அறிஞர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்ஆலா படைத்த காலங்களில் சிறப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுவே ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். இது ஷஃபான் மாதத்திற்குரிய ஒரு சிறப்பாகும். எனவே, இம்மாதத்தில் நாமும் அதிகமாக நோன்பு நோற்பது நபிவழியாகும்.

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய குறிப்புக்கள்

இந்நூலில் இடம்பெறும் அனைத்து ஹதீஸ்களையும் தெளிவுபடுத்த முன்னர் ஒவ்வொரு ஹதீஸையும் அறிவிக்கும் ஸஹாபியைப் பற்றி சில தகவல்களை நாம் இங்கு குறிப்பிடுவோம்.

ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட முதல் ஹதீஸை உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களைப் பார்ப்போம்.

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மை பற்றிய அல்குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்கள்

முதல் வசனம்:

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைத் தூய்மையாக்கியவர்களாக, கலப்பற்றவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும். மேலும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும், மேலும், ஸகாத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் கட்டளையிடப்படவில்லை”. (அல்பய்யினா: 05)

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 06

بسم الله الرحمن الرحيم

நிய்யத்

நிய்யத் என்ற வார்த்தையின் விளக்கம்

அரபு மொழி அடிப்படையில் நிய்யத் என்ற வார்த்தைக்கு நாடுதல், ஒரு விடயத்தைச் செய்வதற்கு உறுதிகொள்ளுதல் போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. மார்க்க அடிப்படையில் நிய்யத் என்ற வார்த்தையின் விளக்கம் ஒவ்வொரு மத்ஹபைப் பொறுத்தும் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 05

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மை பற்றி ஸலபுகளின் கருத்துக்கள்

1. ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் என்பவர் கூறுகின்றார்: “உளத்தூய்மையைவிட உள்ளத்திற்கு மிகவும் கடினமான ஓர் அம்சம் இருக்க முடியாது. ஏனென்றால், உளத்தூய்மைக்கு உள்ளத்தில் எந்தப் பங்கும் இல்லை”.

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 04

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மையுடையவர்களின் அடையாளங்கள்

1. உளத்தூய்மையுடையவர்களின் இரகசியமான காரியங்கள் அவர்களது பகிரங்கமான செயற்பாடுகளைவிட மிகச் சிறந்ததாக இருக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக எனது உம்மத்தைச் சேர்ந்த சில கூட்டத்தினரை நான் அறிவேன்.

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 03

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மையின் சிறப்புக்கள்

1.      அல்லாஹ் அல்குர்ஆனில் உளத்தூய்மையுடையவர்களை சிறப்பித்துக் கூறியிருக்கின்றான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நிச்சயமாக நல்லோர்கள் குவளையில் (பானத்தை) அருந்துவார்கள். அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும். அது ஓர் ஊற்றாகும். அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள்.