Category Archives: Asky Ibn Shamsil Abdeen

இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான நஷ்டவாளிகள் யார்? -01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: (நபியே!) ‘நிச்சயமாக! (உண்மையான) நஷ்டவாளிகள் யாரெனில், மறுமை நாளில் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டவர்கள் தாம். அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும். (அஸ்ஸுமர்: 15)

அன்பின் வாசகர்களே! இந்த மேலான வசனத்தில் அல்லாஹுதஆலா மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டத்தைப் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளான். மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டமானது மிக மகத்தானதும் மிகப் பெரிய நஷ்டமுமாகும்.

நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வதின் சட்டம் என்ன?

 

بسم الله الرحمن الرحيم

நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வது வெறுக்கப்பட்டது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வதை தடை செய்தார்கள்.  இமாம் இப்னுமாஜா இதனை தரமான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவித்துள்ளார்.

தலைப்பாகை அணிவது சுன்னத்தான காரியமா?

بسم الله الرحمن الرحيم

தலைப்பாகை அணிவது வழக்காறுகளில் ஒன்றாகும். அது வணக்க வழிபாடுகளின் ஓர் அம்சமல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகை அணிந்ததற்குரிய காரணம், அது அவர்கள் வாழ்ந்த சமூகத்தினரின் ஓர் ஆடையாக இருந்தமையே ஆகும்.

பெருநாள் குத்பாவை தக்பீரைக் கொண்டு ஆரம்பிக்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

வினா: பெருநாள் குத்பாவை நிகழ்த்துபவர் தக்பீரைக்கொண்டு தனது குத்பாவை ஆரம்பிப்பதின் சட்டம் என்ன?  இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?

பட்டாசுகளை விற்பதும் வாங்குவதும் கூடுமா?

بسم الله الرحمن الرحيم

பட்டாசுகளை விற்பதும் வாங்குவதும் ஹராம் என்று நான் கருதுகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

1. அவைகளை விற்பதிலும் வாங்குவதிலும் பணம் வீணாக்கப்படுகிறது. பணம் வீணாக்கப்படுவது ஹராமாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனைத் தடுத்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமையில் பெருநாள் தினம் வந்தால்…

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

“வெள்ளிக்கிழமையில் பெருநாள் தினம் ஏற்பட்டால், பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டவர்கள் ஜும்ஆவைத் தொழ முடியும் அல்லது ளுஹரைத் தொழலாம்.

வுழூச் செய்யக்கூடியவர்களினால் நிகழக்கூடிய தவறுகள்.

بسم الله الرحمن الرحيم

குத்பா பிரசங்கம்

  • நிகழ்த்தியவர்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன் (அல்கமீ)
  • காலம்: 11.08.2017
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் – பலஹத்துறை, இலங்கை

ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 11

بسم الله الرحمن الرحيم

இரண்டாவது ஹதீஸ்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு படையினர் கஃபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்.

அபூஅய்யூப், பிலால் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் நபியவர்களின் கப்ரைத் தொட்டு முத்தமிட்டார்களா?

 

بسم الله الرحمن الرحيم

கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமே என்று பரவலாக வட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் சம்பவத்தை முன்வைக்கின்றனர். பொதுவாகவே கப்ருபக்தி கொண்டவர்கள் அவர்களது கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையே முன்வைத்து வருகின்றனர் என்பது பொதுமக்களும் அறிந்த விடயமாகிவிட்டது. ஒரு சிலரின் தீர்ப்பை மாத்திரம் முன்வைத்து ஏனைய இமாம்களின் தீர்ப்புக்களை ஆழமாக ஆராயாமல் முடிவு காணக்கூடியவர்களே இவர்கள்.

நீ எங்கிருந்த போதிலும் மரணம் உன்னை வந்தடையும்!

بسم الله الرحمن الرحيم

படைப்பாளனாகிய அல்லாஹுத்ஆலாவின் மாபெரும் படைப்புக்களில் ஒன்றே வாழ்க்கையும் மரணமுமாகும்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: ‘அவன் எத்தகையவனென்றால், உங்களில் சிறந்த முறையில் நற்காரியத்தில் ஈடுபடுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான்.’ (அல்முல்க்: 02)