உம்ரா செய்வது எப்படி?

  • மீக்காத்தை அடைதல்.
  • அங்கு குளித்தல். (ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானது)
  • மணம் பூசுதல்.
  • ஆண்கள் மாத்திரம் இஹ்ராம் ஆடை அணிதல்.

கடனுக்குப் பணம் வாங்கி ஹஜ் கடைமை நிறைவேற்ற முடியுமா?

بسم الله الرحمن الرحيم

எவருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றியதன் பின் நாடு திரும்பியவுடன் தனது கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணவசதியுள்ளதோ அவருக்கு வினவப்பட்ட முறையில் கடனுக்குப் பணம் பெற்று ஹஜ் செய்ய முடியும். மேலும் அவர் அதனையிட்டு வஸிய்யத் செய்து கொள்வார்.

கடனாளிக்கு ஹஜ் செய்ய முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடுகிறார். அவர் மீது செலுத்த வேண்டிய ஒரு கடன் தொகை உள்ளது. இந்நிலையில் அவருக்கு ஹஜ் செய்ய முடியுமா?

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்.

بسم الله الرحمن الرحيم

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைச் சிறப்பித்துப் பல செய்திகள் குர்ஆன், ஹதீஸ் நெடுகிலும் பதிவாகியுள்ளன. அந்த விதத்தில் அல்பஜ்ர் அத்தியாயத்தின் துவக்கத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم

1. “அல்லாஹ் ரு ஹஜ்ஜின் மூலம் மூன்று நபர்களை சுவனத்தில் நுழைவிக்கிறான். அவர்கள்: மரணித்தவரும் தனக்காக ஹஜ் செய்தவரும் அதனைக் கொண்டு வஸிய்யத் செய்தவருமாவார்கள்.

இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அபூமஃஷர் என்பவர் பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்ஹாபிழ் அல்இராகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்ரீஜு அஹாதீஸில் இஹ்யாஃ என்ற நூலில் இந்த ஹதீஸை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சொத்தை விற்று ஹஜ் செய்யலாமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: வீடு, பூமி போன்ற அசையாச் சொத்துக்களைத் தன்வசம் வைத்திருப்பவர் அவற்றை விற்று ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியுமா?

பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மஹ்ரமான ஆண் துணை அவசியமா?

بسم الله الرحمن الرحيم

ஒரு பெண் மீது ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகளில் ஒன்று அவளுக்குரிய மஹ்ரமைப் பெற்றிருத்தலாகும். இவ்விடயம் ஆல இம்றான் அத்தியாயத்தின் 97ஆம் வசனத்தில் ஹஜ் தொடர்பாகக் கூறப்பட்ட ‘அதற்குச் சென்றுவர யாருக்குச் சக்தி உள்ளதோ” என்ற வாசகத்தில் உள்ளடங்கியிருக்கின்றது. இக்கருத்தை இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக், அஸ்ஸவ்ரி, ஷாபி, இப்னுல் முன்திர், ஹஸனுல் பஸரி, அந்நஹஇ ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் கூறியுள்ளனர்.

மறுமை பயணத்தை ஞாபகப்படுத்தும் ஹஜ் பயணம்

بسم الله الرحمن الرحيم

குத்பா பிரசங்கம்

  • நிகழ்த்தியவர்: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன் (மதனி)
  • காலம்: 18.08.2017
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் – பலஹத்துறை, இலங்கை

குழப்பங்கள் குறித்த நபியவர்களின் முன்னெச்சரிக்கைகளும் அவற்றின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றிய வழிகாட்டல்களும்.

بسم الله الرحمن الرحيم

ஜும்ஆ பிரசங்கம்

நிகழ்த்தியவர்: அபூ உபைதில்லாஹ் ஸில்மி (மதனி)
காலம்: 20.07.2018
இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை, இலங்கை

ஜும்ஆ பிரசங்கத்தை செவிமடுக்க கீழ்காணும் சுட்டியை சொடுக்குக!

Fithna Jumma By Silmy Madeni

ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 07

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • உள்ளடக்கம்:

1. ஒருவரை அவர் மரணித்த ஊரிலேயே அடக்கம் செய்தல்.
2. மரணித்தவரின் சொத்தில் இருந்து அவரது கடன்களை நிறைவேற்றல்.
3. ஜனாஸாவை முத்தமிடுதலும், அதற்காக கவளையை வெளிப்படுத்தலும்.
4. ஜனாஸா விடயத்தில் பொறுமையைக் கடைபிடித்தலும் அது குறித்த அல்லாஹ்வின் தீர்பை பொருந்திக் கொள்ளலும்.